ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிய அதிகாரிகளுக்கு திமுகவினர் கொலை மிரட்டல்

Dec 19, 2019 10:03 PM 508

சென்னை கொளத்தூரில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிய அரசு அதிகாரிகளுக்கு, திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவிக நகரை அடுத்து உள்ள கொளத்தூரில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை, 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் இடுகாடாக மாற்றி பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அதில் ஒரு பகுதி நிலம் தனக்கு சொந்தமானது என, ரவிச்சந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அவருக்கு சேர வேண்டிய நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என மாநகராட்சி
அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதன்படி திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகள் தலைமையில், 100க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வந்த திமுக வட்டச் செயலாளர் முருகன் தலைமையிலான  20க்கும் மேற்பட்டோர், சாலையில் திரண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் விதமாக கொலை மிரட்டலும் விடுத்தனர்.

Comment

Successfully posted