இந்தியா வாங்கியுள்ள ரபேல் விமானங்களுக்கு ஆயுத பூஜை

Oct 07, 2019 12:00 PM 91

பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள ரபேல் விமானங்களுக்கு ஆயுத பூஜை செய்வதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்திய விமானப்படைக்கு பிரான்சு நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் முதல்கட்டமாக வாங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விமானங்கள் முறைப்படி இந்தியாவிடம் நாளை ஒப்படைக்கப்படுகின்றன. இதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

விஜய தசமி தினமான நாளை விமானங்களைப் பெறும் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களுக்கு ஆயுத பூஜை செய்கிறார். அதைத் தொடர்ந்து, ரபேல் விமானத்தில் சிறிது நேரம் பறந்து அவர் ஆய்வு செய்கிறார். இதைத்தொடர்ந்து பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரானை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின் அடுத்த ஆண்டு மே மாதம் ரபேல் விமானங்கள் இந்தியா கொண்டு வரப்படவுள்ளன.

Comment

Successfully posted