பழனி தண்டாயுதபாணி கோயிலில் 32 நாட்களில் சுமார் ரூ.3 கோடி காணிக்கை

Dec 14, 2019 11:09 AM 378

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில், 32 நாட்களில், 3 கோடியே 47 லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயில் உண்டியல் நிரம்பியதை அடுத்து, மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில், உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் காணிக்கையாக, 3 கோடியே 47 லட்சம் ரூபாயும், 1 கிலோ தங்கம் மற்றும் 11 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பித்தளை வேல், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள் மற்றும் ஏராளமான பட்டாடைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Comment

Successfully posted