சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையுடன் புகைப்படம் எடுக்க கூடாது -வனத்துறை

Jan 13, 2020 01:26 PM 335

புலிகள் காப்பக  சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையுடன்   சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில். வனத்திலிருந்து அடிக்கடி வெளியேறி,அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒரு யானைக்கு அப்பகுதி மக்கள் ரிவால்டோ என பெயரிட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு மற்றொரு காட்டு யானையுடன் சண்டையிட்டதில் ரிவால்டோ யானைக்கு காயம் ஏற்பட்டதால், அந்த யானை வனத்துறையினரின் கண்காணிப்பில் உள்ளது. இந்த நிலையில், முதுமலைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதன் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதுடன், அதற்கு உணவுகளையும் வழங்குகின்றனர். ரிவால்டோ ஒரு காட்டு யானை என்பதால், எப்போது வேண்டுமானாலும் கோபமுற்று உயிர்சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ரிவால்டோவிற்கு உணவு வழங்குவதையும், அதனருகில் சென்று புகைப்படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Comment

Successfully posted