கத்தியை காட்டி பணம்,நகை கொள்ளையடித்த மர்ம கும்பல் கைது

Sep 07, 2019 12:10 PM 254

சென்னையில் கத்தியை காட்டி தங்கச் சங்கிலி மற்றும் செல்போன்களை பறித்து சென்ற இருசக்கர வாகன கொள்ளையர்கள் 5 பேரை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்தனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வினோத் குமார் என்பவர் தனது உறவினரை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவான்மையூர் கலோசேத்திரா காலனியில் உறவினரை இறக்கி விட்டு எல்.பி சாலை வழியாக திரும்பி கொண்டிருந்தார். இந்தநிலையில், 5 பேர் கொண்ட கும்பல் 2 இருசக்கர வாகனத்தில் வினோத்குமாரை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் சிசிடிவி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதையடுத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து நகை மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் நீலாங்கரை, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

Comment

Successfully posted