டெல்லி முதல்வராக 16-ம் தேதி பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

Feb 14, 2020 08:55 AM 687

அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிறமாநில முதல்வர்களுக்கும், மாற்று  கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பாண்மைத்  தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெர்றுள்ள  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், பிப்ரவரி 16-ஆம் தேதி அன்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இது குறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய்,    பொதுமக்கள் முன்னிலையில், மூன்றாவது முறையாக  அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகப் பதவியேற்க உள்ளார் என்றும்,   பதவியேற்பு விழாவிற்கு பிற மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை’ என்றும் தெரிவித்தார். 

Comment

Successfully posted