டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

Feb 16, 2020 02:15 PM 527

டெல்லி முதலமைச்சராக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 62  தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற, காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், 3ஆவது முறையாக முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Comment

Successfully posted