பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ஆர்யா...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Feb 20, 2020 05:47 PM 1745

நடிகர் ஆர்யாவின் 30வது படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஆர்யா, கடைசியாக  கடந்த ஆண்டு நடிகர் சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்  ‘டெடி’ படத்தில் அடுத்ததாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷாவுடன் இணைந்துள்ளார்.


இதற்கிடையில்  நேற்று முதல் உடலமைப்பை முற்றிலும் மாற்றிய ஆர்யா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அது பிரபல இயக்குநருடன் அவர் இணையும் படத்திற்கான தன் தோற்றத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என ஆர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted