மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட சென்னை மாணவிக்கு உற்சாக வரவேற்பு

Jan 31, 2020 04:10 PM 486

டெல்லியில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற பாஷினி பாத்திமாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் கடந்த 5 நாட்களாக குளோபல் மிஸ்டர் மற்றும் மிஸ் இந்தியா ஏசியா போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் மிஸ் இந்தியாவாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி பாஷினி பாத்திமா தேர்வு செய்யப்பட்டார். சென்னை வந்த பாஷினி பாத்திமாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஷினி பாத்திமா, ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக கூறினார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பது தனது ஆசை எனவும் பாஷினி பாத்திமா தெரிவித்தார்.

Comment

Successfully posted