பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதி

Oct 11, 2018 12:36 PM 628

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தியாவின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 11 காசுகள் அதிகரித்து, 85 ரூபாய் 61 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 90 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோலிய பொருட்களின் விலை வாகன ஓட்டிகளை கடும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.

Comment

Successfully posted