அசோக் லேலண்ட் நிறுவனம் 5 இடங்களில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிப்பு

Sep 09, 2019 01:28 PM 63

வாகன விற்பனை குறைந்ததால் 5 இடங்களில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை நிறுத்துவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.


சென்னையை அடுத்துள்ள எண்ணூர் ஆலையில் 16 நாட்களும், ஓசூரில் உள்ள ஆலையில் 5 நாட்களும் உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் ஆலை உள்ளிட்ட 3 ஆலைகளில் 10 முதல் 18 நாட்களுக்கு வாகன உற்பத்தி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் வாகன விற்பனை குறைந்ததே அலோக் லேலண்ட் நிறுவனத்தின் அறிவிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Comment

Successfully posted