ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி அதிக பதக்கங்களை வெல்ல வாய்ப்பு!!

Aug 16, 2018 12:22 PM 619
18 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா (Jakarta) மற்றும் பாலம்பேங்கில். (Palembang) வரும் 18 ஆம் தேதி தொடங்குகின்றன. செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெரும் இந்தப் போட்டிகளில் இந்தியா உட்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்கின்றன.  இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் 36 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம் உட்பட 57 பதக்கங்களை வென்று 8 ஆ ம் இடம் பிடித்தது. ஆனால் இந்த முறை அதைவிட அதிக பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் முன்னேறுவோம் என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பாத்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக, கபடி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தடகளம், பேட்மிண்டன் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்ல அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும்  கணிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted