விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதி விவசாயிகள் கோரிக்கை

Jun 13, 2019 12:07 PM 49

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதி விவசாயிகள், விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் 160க்கும் மேற்ப்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களிலிருந்து சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு ஆண்டுகாலமாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கர்நாடகத்தோடு மத்திய அரசும், தமிழக அரசும் பேச்சுவார்த்தை தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted