விஜய் டிவி நிர்வாகத்திடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக நடிகை மதுமிதா மீது புகார்

Aug 21, 2019 03:35 PM 49

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன் வெளியேறிய நடிகை மதுமிதா விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து பணம் கேட்டு தொலைபேசியில் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் சார்பாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதாவிற்கு வழங்க வேண்டிய 32 லட்சம் ரூபாயை இன்னும் ஒருவார காலத்திற்குள் கொடுத்து விடுவோம் என்றும், அவகாசம் உள்ள நிலையில் தொடர்ந்து தொலைபேசியில் பணம் கேட்டு மதுமிதா தொந்தரவு செய்வதாகவும் அந்தப் புகாரில் விஜய் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted