அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு வெளியீடு இறுதியான பட்டியல் இல்லை

Aug 03, 2018 04:07 PM 626

 

அசாம் மாநிலத்தில் குடியுரிமை பெற்ற மக்களின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேர் அத்துமீறி குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடிமக்கள் வரைவு பட்டியல் நேர்மையாக தயார் செய்யப்பட்டதாக கூறினார். வரைவு பதிவேடு வெளியீடு இறுதியானது அல்ல அவர் தெரிவித்தார். குடிமக்கள் வரைவு பதிவேட்டில் எந்த ஒரு இந்தியரும் விடுபட மாட்டார்கள் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

Comment

Successfully posted