உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது!

Jan 14, 2020 03:41 PM 366

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைவில் சோதனை பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சனை, அப்துல் சமீம், மற்றும் தௌபிக் ஆகிய இருவர், துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தப்பியோடினர். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில், தொடர்புடையவர்களின், புகைப்படங்களை வெளியிட்டு, தமிழக காவல்துறையினர், தீவிரமாக தேடி வந்தனர். மேலும், மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பெங்களூருவில் தீவிரவாதி ஒருவனையும் கைது செய்தனர். இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில், வில்சன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம், தௌபிக் ஆகியோரை, கர்நாடகா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Comment

Successfully posted