ஓவியத் திறமையால் அசத்தும் 70 வயது முதியவர்!

Jul 02, 2020 01:22 PM 242

தென்காசி மாவட்டத்தில் 70 வயது முதியவர் தனது ஓவியத் திறமையால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறார். தென்காசி மாவட்டம் திருவேட்டநல்லூரை சேர்ந்த மாடசாமி என்ற முதியவர் தச்சு வேலையினை தொழிலாக செய்து வந்தார். சுமார் 8 வருடத்திற்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் நடக்க முடியாத நிலைக்கு சென்றார். எனினும், மனம் தளராத மாடசாமி ஓவியம் வரைவதில் கவனத்தை செலுத்தினார். தற்போது எந்த ஒரு உருவத்தையும் பார்த்தவுடன் அப்படியே வரையும் திறனை பெற்றுள்ளார். இவரது ஓவியங்களை அந்த பகுதியை சார்ந்த மக்கள் பாராட்டி வருகின்றனர். இவர் ஊனமுற்ற முதியவர் என்பதால் தமிழக அரசு ஊக்குவித்து நிவாரண உதவி வழங்கினால் தமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Comment

Successfully posted