குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

Dec 15, 2019 06:11 PM 617

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. அதன் காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து, சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க காவல்துறை தடை விதித்திருந்தது. தற்போது தண்ணீர் வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted