அசாம் தலைநகர் கவுகாத்தியில் வெடிகுண்டு வீச்சு

May 16, 2019 07:26 AM 240

அசாம் தலைநகர் கவுகாத்தியில் மர்ம நபர்கள் வீசிய குண்டு வெடித்து 8 பேர் படுகாயமடைந்தனர்.

கவுகாத்தியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியை குறிவைத்து இந்த வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுகாத்தி நகரில் பரபரப்பு நிறைந்த ஜி.ஆர் பருவா சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற வன விலங்கு சரணாலயம், பார்க், வணீக வளாகம் என அனைத்தும் அருகருகே இருப்பதால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

இந்த குண்டு வீச்சில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted