ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள்-ராணுவத்தினர் இடையே தாக்குதல் :40 பேர் உயிரிழப்பு

Sep 01, 2019 10:27 AM 428

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே நடைபெற்ற தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் காவல்துறை ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது. இந்நிலையில், தலைநகர் காபுலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குந்தூஸ் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு ராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் 38 பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படைகளை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted