சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்

Oct 29, 2018 10:15 AM 332

சிரியாவில் ஜனநாயக படையினருக்கும், குர்து இன போராளிகளுக்கும் எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பெரும்பாலான இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்றும், சனிக்கிழமையன்றும் சிரிய ஜனநாயக படையினருக்கும், குர்து இன போராளிகளுக்கும் எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் சிரிய ஜனநாயக படையினர், குர்து இன போராளிகள் என மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய ஜனநாயக படையினருடன் அமெரிக்க கூட்டுப்படைகள் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்தாலும் அவர்களின் ஆதிக்கம் ஓங்கி வருவது குறிப்பிடத்தக்ககது.


Comment

Successfully posted