ரயில் நிலையத்தில் நடை மேடை திடீரென இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

Mar 15, 2019 07:07 AM 65

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடை மேடை திடீரென இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மும்பையின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் 1 வது நடை மேடை இன்று மாலை திடீரென இடிந்து விழுந்துவிபத்துக்குள்ளானது. யாரும் எதிர்பாராத வகையில் நடந்த இந்த விபத்தில், இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த தேசிய மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comment

Successfully posted