ஐஐடி வளாகத்தில் 40 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை

Dec 02, 2019 07:12 PM 491

சென்னை, ஐஐடியில் 40 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் அர்ஜுனன் என்பவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 40 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் காவல்துறையினர் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஐஐடி வளாகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted