முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே இருசக்கரவாகனம் நிறுத்த மாற்று இடம் அமைக்க கோரிக்கை

May 27, 2019 09:50 AM 110

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பொருட்கள் வாங்க இருசக்கர வாகனங்களில் முதுகுளத்தூர் பகுதிக்கு வருகை தருகின்றனர். அவர்கள் வாகனங்களை பேருந்துநிலையம் அருகில் நிறுத்திவிட்டு செல்வதால், அப்பகுதியில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எப்போதும் பயணிகளின் கூட்டமும் முதுகுளத்தூர் பேருந்துநிலையம் அருகே நிறைந்து காணப்படுவதால், போக்குவரத்து நெருக்கடியும் விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இரு சக்கர வாகனம் நிறுத்த மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

Comment

Successfully posted