ராஜாஜி மருத்துவமனையில் தீ விபத்து

Sep 04, 2019 06:00 PM 226

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தூரித நடவடிக்கையால், எவ்வித பாதிப்பும் இன்றி நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில், திடீரென தீ பற்றியுள்ளது. அறுவை சிகிச்சை பகுதியில் உள்ள தலையணையில் எழுந்த புகை மூட்டத்தால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மேலும் பரவியதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே, மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகளை பாதுகாப்பான வார்டுக்கு மாற்றினர். இதனால், நோயாளிகள் எவ்வித பாதிப்பும்மின்றி காப்பாற்றப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted