ஒரே நேரத்தில் 1,200 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி சாதனை

Feb 11, 2019 12:20 PM 327

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சென்றாம்பள்ளி கிராமத்தில் தமிழ் திருமுறை பரதநாட்டிய உலக சாதனை வைபவம் அங்குள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. குடியாத்தத்தை சேர்ந்த நடராஜா நாட்டியாலயா மற்றும் ஆர்யா வித்யாஷ்ரம் பள்ளி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியில் வேலூரின் 21 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை உலக சாதனையாக டிஃபா (TIFA) அறிவித்துள்ளது. இதற்கான சான்றிதழ் நடராஜா நாட்டியாலயா பள்ளி ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் 1,200 மாணவிகள் ஒன்றுசேர்ந்து நிகழ்த்திய இந்த நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

Related items

Comment

Successfully posted