அரசு பள்ளி மாணவர்களுக்கு அட்டல் டிங்கர் லேப் - அமைச்சர் செங்கோட்டையன்

Oct 15, 2018 03:48 PM 693

சென்னை எம்ஜிஆர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்காளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், ஏசிடி என்னும் தனியார் நிறுவனம் 300 அரசு பள்ளிகளுக்கு இலவச வைஃபை வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் சீருடை வழங்கப்பட உள்ளதாகவும், ஜனவரிக்குள் மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று இலவச டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 8 மாதத்தில் பாடங்கள், மாற்றியமைக்கப்பட்ட உள்ளதாகவும், இதனால் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கூறினர்.

மாணவர்கள் சிறந்த விஞ்ஞானிகளாக வளர ரோபோ லேப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதை மாவட்டம்தோறும் தொடங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 672 பள்ளிகளில் 20 லட்சம் ரூபாய் செலவில் அட்டல் டிங்கர் லேப் துவக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

Comment

Successfully posted

Super User

unngal sevai natirku tevai


Super User

சூப்பர் தலைவரே


Super User

முன்னாள் மாணவர்கள் ஒத்துழைப்புடன் நவீன வகுப்பறை அமைக்கும் செலவு தொகையின் மதிப்பில் முப்பது சதவீதம் அரசு மானிய ஊக்கத்தொகை வழங்க பரிசீலிக்கவும்.