அத்திகடவு - அவிநாசி திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்

Feb 20, 2020 09:45 AM 592

அத்திகடவு - அவிநாசி திட்டம் இந்தாண்டே மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளதற்கு அத்திகடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அத்திகடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், நியூஸ்ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், அத்திகடவு அவிநாசி திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் நிறைவேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்திருப்பது,  ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளிடம் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்திகடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 3.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பித்தாக தெரிவித்துள்ள சுப்ரமணியம், அதே நன்னாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Comment

Successfully posted