மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய நபர்!

Mar 19, 2020 04:32 PM 1039

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர், கார் கண்ணாடியை உடைத்து, பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரூப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த சைக்கிஸ் செயின் மற்றும் கத்தியை எடுத்து முன்புறம் நின்றிருந்த கார் கண்ணாடியை உடைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த அவர் வரவேற்பறையில் உள்ள டேபிள் கண்ணாடியை உடைத்து, அவரை தடுக்க வந்த பெண் காவலர் ஒருவரையும் சைக்கிள் சங்கிலியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி காவல்துறையினர் விரைந்து வந்து அந்த நபரைக் கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பதும் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

Comment

Successfully posted