பட்டுக்கோட்டை அருகே கோயில் எழுத்தர் மீது கொலை முயற்சி தாக்குதல்

May 31, 2019 12:26 PM 274

தாக்குதல் பட்டுக்கோட்டை அருகே கோயில் எழுத்தர் மீது கொலை முயற்சி நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம், பரக்கலகோட்டை கிராமத்தில், பொது ஆவுடையார் கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு மட்டும் சந்நிதி திறக்கப்பட்டு, சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் கோயில் அதிகாரிகளை மிரட்டி, பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இக்கோயிலுக்கு வந்துள்ள புதிய நிர்வாக அலுவலர் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் மாரியப்பன், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலுக்குள்ளான எழுத்தரின் புகாரின் பேரில் தாக்குதல் நடத்திய மாரியப்பன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted