தங்கள் முகாம் மீதான தாக்குதல் உண்மைதான்- ஜெய்ஷ் இ முகமது

Mar 03, 2019 04:44 PM 345

தங்கள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஒப்புக்கொண்ட ஆடியோ வெளியாகியுள்ளது

பாகிஸ்தானின் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தி அழித்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும்,இதனை பாகிஸ்தான் மறுத்து வந்தது. இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அம்மர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தங்கள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ள அவர், இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது தவறு என்றும் கூறியுள்ளார்

Comment

Successfully posted