குமரியில் பெண்ணைப் பின்தொடர்ந்ததை கண்டித்த இருவர் மீது தாக்குதல்

Jan 01, 2020 05:16 PM 690

கன்னியாகுமரியில் பெண்ணைப் பின் தொடர்ந்ததற்காகக் கண்டித்த இருவரை இளைஞர் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார்.

நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டியைச் சேர்ந்த ஆனந்த், அருள் ஆகிய இருவரும், இவர்களது உறவுக்காரப் பெண்ணைப் பின் தொடர்ந்த இளைஞரைச் சில நாட்களுக்கு முன் கண்டித்துள்ளனர். இந்நிலையில், ஆனந்த், அருள் ஆகியோர் நாகர்கோவில் இறச்சகுளத்திற்குச் சென்றபோது அவர்களை வழிமறித்த அந்த இளைஞர் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்த நிலையில் ஆனந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அருள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted