பெண்ணை தாக்கி வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்கள் கைது

Dec 09, 2019 06:51 AM 297

சென்னை கொருக்குப்பேட்டையில், பெண்ணை தாக்கி, அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்குள், அத்துமீறி நுழைய முயன்றவர்களை, காவலன் செயலியின் உதவியால் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அனிதா சுரானா. மர்ம நபர்கள் இருவர், இவரது வீட்டின் கதவை தட்டி கொரியர் வந்துள்ளது கூறியுள்ளனர். கதவை திறந்து பார்த்த அனிதாவுக்கு இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் சுதாரிக்கும் முன்னரே, மர்மநபர்கள் அனிதாவை தாக்கி வீட்டினுள் நுழைய முயன்றுள்ளனர். அப்போது வீட்டினுள் இருந்த அனிதாவின் மாமியார் ப்ரீத்தி, தான் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்த காவலன் செயலியை பயன்படுத்தி, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அனிதாவிடம் தகராறு செய்து கொண்டிருந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted