பொதுமக்களை தாக்குவது,நூதன தண்டனை வழங்குவது கூடாது - டிஜிபி ஜே.கே. திரிபாதி உத்தரவு!

Apr 07, 2020 09:31 PM 557

பொதுமக்கள், வியாபாரிகளை மரியாதைக்குறைவாக நடத்தக்கூடாது எனவும், கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனவும் காவல் துறையினருக்கு டி.ஜி.பி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐ.ஜி-க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  தற்போதைய சூழலில் பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதால் அவர்களிடம் காவல்துறையினர் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார். தமிழக காவல்துறையினர் பயனுள்ள, திறமைமிக்க படையினர் என்பதையும் தாண்டி,  மனிதத்துவம் மிக்கவர்கள்  என்பதை   நிரூபிக்க வேண்டும் என  கேட்டுக் கொண்டுள்ளார் . ஒருசில காவலர்களால் நடக்கும் தவறுகளால், அனைத்து போலீசாருக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் கோப தாபங்களை தவிர்த்து, அமைதியாகவும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Comment

Successfully posted