குடியரசு தினவிழாவை சீர்குலைக்க முயற்சி : 2 தீவிரவாதிகள் கைது

Jan 25, 2019 09:13 AM 332

டெல்லியில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த 2 தீவிரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் 70வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் கனி மற்றும் ஹிலால் அகமது பட் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லியில் தாக்குதல்களை நடத்துவதற்காக இருவரும் தனித்தனியாக இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து அதிகளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வேறுயாரெனும் தாக்குதல் நடத்தும் நோக்கில் வேறு எங்கும் பதுங்கி உள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted