புதுக்கோட்டையில் நிலம் வாக்குவது குறித்த பணப் பிரச்சனையில் கொலை முயற்சி

Apr 25, 2021 09:28 AM 246

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பசுமலைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், ஜவுளி ஸ்டோர் நடத்திவரும் சுப்பிரமணியனிடம், நிலம் வாங்க பணம் கொடுத்துள்ளார்.

சுப்பிரமணியன் மூலம் பணம் பெற்றவர் சொன்னப்படி சண்முகத்திற்கு இடத்தை பதிவு செய்து கொடுக்காமலும், பணத்தை திரும்பி கொடுக்காமலும் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சண்முகம் கடந்த 19-ம் தேதி மாலை சுப்பிரமணியன் நடத்தும் ஜவுளி கடைக்கு சக்தி, சந்திரகுமார் என்ற இரண்டு பேருடன் சென்றுள்ளார்.

கடையின் வாயிலில் அமர்ந்திருந்த சுப்பிரமணியை தான் மறைத்து எடுத்துவந்த கத்தியை எடுத்து வெட்ட ஆரம்பித்தார்.

உடனடியாக சுதாரித்துகொண்ட சுப்பிரமணி, அங்கிருந்து தப்பி ஓட, விடாமல் துரத்தி சென்று கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார்.

ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் சுப்பிரமணியை சிறிது தூரம் துரத்திய பின்பு, சண்முகம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

காயமடைந்த சுப்பிரமணியன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

புகாரின் அடிப்படையில் திருக்கோகர்ணம் போலீசார் சுப்பிரமணியனின் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சண்முகத்திற்கு உதவியாக வந்த சக்தியையும், சந்திரகுமாரையும் கைது செய்த போலீஸார், தப்பியோடிய சண்முகத்தை தேடி வருகின்றனர்.

 

 

Comment

Successfully posted