ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போன “டாய் ஸ்டோரி” பட போஸ்டர்

Aug 31, 2019 08:40 PM 209

ஹாலிவுட்டின் பிரபல அனிமேஷன் திரைப்படமான “டாய் ஸ்டோரி” திரைப்படத்தின் போஸ்டர் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படம் வெளியான காலக்கட்டத்தில் டிஸ்னியின் உறுப்பினராக இருந்த, மறைந்த ஆப்பிள் கம்பெனியின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இத்திரைப்படத்தின் போஸ்டரில் கையெழுத்திட்டுள்ளார். அதனால் இந்த போஸ்டர் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தது. 6 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆரம்ப விலையாக அறிவிக்கப்பட்ட போஸ்டர் இறுதியாக 31,250 டாலர்களுக்கு(அதாவது இந்திய மதிப்பில் ரூ.22 லட்சம்)ஏலம் போயுள்ளது.

Comment

Successfully posted