வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. ஓரிரு தினங்களில் இது கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வு மண்டலம் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 18ஆம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.