ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 256 ரன் இலக்கு

Jan 14, 2020 07:31 PM 731

 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 256 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்து வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களம் இறங்கிய ஷிகர் தவான், கே.எல்.ராகுல் இணை நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த தவான் 74 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 47 ரன்களிலும், கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களம் இறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 49 புள்ளி ஒரு ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது.

Comment

Successfully posted