மகளிர் T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை சாதனை

Oct 03, 2019 08:25 AM 190

மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் வரலாற்றில், 61 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீராங்கனை அலிஸா ஹீலி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில்,  ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 226 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அலிஸா ஹீலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 19 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 148 ரன்கள் குவித்து ரசிகர்களை வியக்க வைத்தார்.  

Comment

Successfully posted