ஆஸ்திரியாவில் அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்!

Mar 08, 2021 12:13 PM 9944

ஆஸ்திரியாவில் அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 49 வயது பெண் ஒருவர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவரது ரத்தம் கடுமையாக உறைந்து, அதன் விளைவாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 35 வயது உடைய பெண் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, ரத்தம் உறைதல் அதிகரித்து, அதன் காரணமாக நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

Comment

Successfully posted