ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு!!!

May 23, 2020 10:02 AM 223

தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்ததற்கு, ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி காவல் எல்லையை தவிர பிற பகுதிகளில், ஆட்டோ மற்றும் ரிக்சாக்களை இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசிய ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், தமிழகத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் கூட்டமைப்பின் சார்பில் நன்று தெரிவித்து கொள்வதாக கூறினார். மேலும், உள்நாட்டு விமான சேவைகள் துவங்க உள்ள நிலையில், கூடிய விரைவில் சென்னையிலும் ஆட்டோக்களை இயக்க முதலமைச்சர் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், ஆட்டோக்களில் ஒரு நபர் அமர்ந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு நபர்கள் பயணிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Comment

Successfully posted