ஆட்டோ ஓட்டுநரை ம.பி. போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல்

Apr 07, 2021 10:41 AM 718

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், முக கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணா அணிந்திருந்த முககவசம் மூக்குக்கு கீழே நழுவி இருப்பதை கண்ட போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், அதனால் காவல் நிலையத்திற்கு வரும்படியும் கூறியுள்ளனர். ஆனால் தான் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதால் காவல் நிலையத்திற்கு வர கிருஷ்ணா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் கிருஷ்ணாவை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது தனது தந்தையை விட்டுவிடுமாறு கிருஷ்ணாவின் மகன் காவல்துறையினரிடம் கெஞ்சிய காட்சி நெஞ்சை பதறவைக்கிறது.

போலீசார் தாக்கிய போது அங்கிருந்த சிலர் இந்த நிகழ்வை வீடியோ எடுத்தார்களே தவிர யாரும் கிருஷ்ணாவை காப்பாற்ற முன்வரவில்லை. சமூக வலைதளங்களில் இந்த காட்சி வேகமாக பரவிய நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted