போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

May 15, 2019 08:11 PM 167

போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் பஜார் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போது போக்குவரத்திற்க்கு இடையூராக நின்று கொண்டிருந்த டாடா ஏசி வாகனத்தை ஆய்வாளர் விஜயகாந்த் அகற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. அப்போது, ஓட்டுநர் கர்ணன் வாகனத்தை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆய்வாளர் வாகனத்திற்கு பூட்டுப் போட்டுள்ளார். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், போக்குவரத்து ஆய்வாளருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார். இதையடுத்து சக காவலர்கள் அவரை பிடித்து பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஓட்டுநர் கர்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted