பயணி தவறவிட்ட ரூ.3 லட்சம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

Jan 03, 2019 06:37 PM 91

பயணி தவறவிட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை திருப்பி அளித்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த அசாருதின் என்பவர் கார் வாங்குவதற்காக சென்னை வந்துள்ளார். கோயம்பேடு வந்த அவர், ரோகினி திரையரங்கம் அருகில் உள்ள கார் விற்பனையகத்துக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பார்த்திபன் என்பவருடைய ஆட்டோவில் சென்றுள்ளார். இறங்கும் போது தனது பணப்பையை எடுக்க மறந்து விட்டார். இதை கவனிக்காமல் அங்கிருந்து கிளம்பிய ஆட்டோ டிரைவர் பார்த்திபன், பின்னர் ஆட்டோவில் ஒரு பேக் இருப்பதைப் பார்த்து அதை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். விசாரணைக்கு பின் அசாருதினிடம் பணப்பை ஒப்படைக்கப்பட்டது. பணத்திற்கு ஆசைப்படாமல் திருப்பி அளித்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபனையும், அதற்கு நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளையும காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

Comment

Successfully posted