திருநங்கையைக் காதலித்து திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்

Feb 15, 2020 07:07 PM 493

தமிழகத்தில் முதல் முறையாக  ஆட்டோ டிரைவர் ஒருவர் திருநங்கையைக் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.'

கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுரேகா என்ற திருநங்கையை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து வாழ்ந்துவந்தார்.

இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை சட்டப்படி  பதிவு செய்ய சென்றபோது சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த திருமணத்தைப் பதிவு செய்வதற்கான நடைமுறை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து,  கோவையைச் சேர்ந்த திருநங்கைகளின் சட்ட ஆலோசகர் சிவகுமாரின் உதவியோடு மணிகண்டன் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  மேலும் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த  நிலையில் நேற்று வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் இவருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. இதுவே தமிழகத்தில் நடந்த திருநங்கைக்கான முதல் பதிவு திருமணம் என்பது
குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted

Super User

congrats