ஆட்டோ ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் ஒருவர் வெட்டிக்கொலை

Feb 14, 2020 08:41 AM 331

திருவண்ணாமலையில் இரவு நேரங்களில்  ஆட்டோ ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில்  ஓட்டுநர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இரவு நேரத்தில் வழக்கமாக ஆட்டோ ஓட்டிவந்த  ஆனந்தன் மற்றும் பாஸ்கரன் ஆகிய இரு நபர்களுக்கு இடையேவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம்  இரவு 12 மணி அளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ அருகில் நின்றிருந்த ஆனந்தனை, பாஸ்கரன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் தலை மற்றும் உடல் கைவிரல் ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த ஆனந்தனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த போது அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அதே நேரத்தில், ஆனந்தனை அரிவாளால் வெட்டிய பாஸ்கரன் திருவண்ணாமலை  காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த கொலை சம்வபம் குறித்து வழக்கு பதிவு செய்த   காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted

Super User

good morning sir today news 2020put sir


Super User

videos news