மலேசியா மணல் விற்பனை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - பொதுப்பணித்துறை முடிவு

Oct 15, 2018 10:11 AM 394

மலேசியா மணல் விற்பனை மந்தமாக இருப்பதால் , பொதுமக்களுக்கு விழிப்புணைவை ஏற்படுத்தவும், கட்டுமான நிறுவனங்களை அழைத்து விளக்கப் பொதுக் கூட்டம் நடத்தவும் பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை குறைக்க வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் முதல் கட்டமாக 56,750 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த மணலை விற்பனை செய்வதற்கான முன்பதிவு கடந்த 5-ம் தேதி தொடங்கியது. 8-ம் தேதி முதல் மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு யாரும் மணல் வாங்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, மணலின் தரம் குறித்த சந்தேகத்தை போக்கும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மணல் குறித்து திரையரங்குகளில் விளம்பரம், துண்டு பிரசுரங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted