சென்னை தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Dec 10, 2019 03:35 PM 556

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையர் மகேஸ்வரி கலந்துகொண்டு மாணவிகளை காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறி, அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலியை அனைவரிடமும் கொண்டு செல்லும் விதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவிகள் மத்தியில் காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted