காவலன் செயலி குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு

Dec 08, 2019 06:46 AM 381

காவலன் செயலி குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பூக்கடை சரக துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், காவலன் செயலி குறித்து பெண்கள் மத்தியில் ஒலிபெருக்கி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம், பூக்கடை சரக துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில், காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில், காவலன் செயலி குறித்து ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்கள் மத்தியில் விளக்கிக் கூறப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பெண்களுக்கு, பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, காவலன் செயலி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல், உதவியாளர் லட்சுமணன், ஒலிபெருக்கியின் வாயிலாக பெண்கள் மத்தியில் காவலன் செயலி குறித்து உரையாற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Comment

Successfully posted